புனித அன்னைத் தெரசா 1910-1997
அகிலம் போற்றும் அன்னைத் தெரசாவை மாபெறும் புனிதையாகவே உலகம் போற்றுகிறது. அதற்குச் சான்று அவர் பெற்ற பத்மஸ்ரீ முதல் அமெரிக்க குடியரசின் பிரஜை என்ற 20 க்கும் மேலான விருதுகளும், ஆறுக்கும் மேற்பட்ட பல்பலைக்கழகப் பட்டங்களுமே. இன்று 120 க்கும் மேலான நாடுகளில் 170 கல்வி நிறுவனங்களும், 1370 காப்பகங்களும், 755 க்கு மேலான இல்லங்களும் ஆண்களுக்கென்று ஒரு தனி சபையும் ஏற்படுத்தி பலகோடி மக்களுக்கு அல்லும் பகலும் அயராது ஊழியம் செய்தார்கள் என்றால் அந்த ஆன்மீக வல்லமையை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
திருமதி. இந்திராகாந்தி அம்மையார் பிரதமாராயிருந்த போது ஒருமுறை கல்கத்தாவுக்குச் சென்ற வேளையில் அன்னை தெராசாவைக் காணச்சென்றார்கள். அன்னை இருதய பவனில் இல்லை. தொழுநோயாளிகளின் குடிசையில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட பிரதமர் இந்திராகாந்தி அந்தச் சேரிக்குச் சென்றார். அன்னை அங்கே இருந்த தொழுநோயாளிகளின் புண்களைக் கழுவி, மருந்து போட்டுக் கொண்டிருந்தார். அவர்களுக்குப் பின்னால் பிரதமர் நின்று கொண்டிருப்பதை அன்னை தெராசா கவனிக்கவில்லை. தன் பணி முடிந்ததும் நிமிர்ந்த போதுதான் பிரதமர் அங்கு முன் அறிவிப்பின்றி நிற்பதைப் பார்த்து 'நமஸ்தே இந்திரா ஜி' என்று இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார்கள் பிரதமர் உடனே "நீங்கள் செய்யும் அரும் பெரும் தொண்டினை நான் நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்தத் தள்ளாத வயதில் இவ்வளவு ஆர்வத்துடன் பணி செய்ய எங்கிருந்து வல்லமை கிடைக்கிறது?" என்று கேட்டார்கள். அதற்கு அன்னை பிரதமரை அழைத்துக் கொண்டுபோய் ஓர் குடிசையில் வைத்திருந்த நற்கருணை பேழையைக் காட்டி இங்கு தான் நான் வல்லமை பெறுகிறேன் என்றார்களாம். "அந்த அப்பம் மிகச்சிறிய துண்டு தனோ! அதில் எப்படி வல்லமை கிடைக்கும். நானும் தான் தினமும் மூன்று சப்பாத்தி சாப்பிடுகிறேன் என்றார்களாம். அதற்கு அன்னை, "நீங்கள் உண்ணும் சப்பாத்தியில் இருப்பது வெறும் கோதுமை. ஆனால் நாங்கள் உண்ணும் நற்கருணையில் எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உண்மையான சரீரமும், இரத்தமும், மனித இயல்பும், தெய்வீக இயல்பும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்களாம். ஆகவே அன்னை தெராசாவும் அவர்கள் அருட்சகோதரிகளும் செய்யும் அரும் பெரும் சேவைக்கு மூலக்காரணம் திவ்ய நற்கருணை நாதரே.
"நற்கருணை உண்மையிலே நாம் அறிந்து கொண்டால் கிறிஸ்துவை உணரவும், அவரை அன்பு செய்யவும், அவர் வழியாக ஏழைகளுக்குச் சேவை செய்யவும் கடினமாக இராது. நற்கருணை என்பது கிறிஸ்துவை உட்கொள்வது என்று கூறுவதை விட அவரது பசியை நாம் நிறைவு செய்கிறோம் என்று சொல்வதே சிறந்தது. என்னிடம் வாருங்கள் என்று கிறிஸ்து வரவேற்கிறார். விவிலியத்தில் ஓர் இடத்தில் கூட கிறிஸ்து யாரையும் தள்ளி விடுவதாக ஒரு சொல் கூட இல்லை, மாறாக இ 5 என்னிடம் வாருங்கள் என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்" என்று உறுதி அளிக்கிறார் (யோ.6:37). கிறிஸ்து தன்னை உயிர்தரும் உணவாக மாற்றினார். அவரையே திருமணவாக உணவாக மாற்றிய பின் அவர் முழுவதுமாக கையளித்துவிட்டார். அதலால் அவரை உட்கொண்டபின் நம்மை பிறருக்குக் கொடுக்கத் தேவையான பலம் கிடைப்பதை உணர முடியும். 'அன்பே தெய்வமான இயேசுவே! உலகத்தின் ஏதோ ஒரு முடுக்கிலே உழன்று தங்களது பேரன்பிற்காகத் தவங்கிடந்த என்னை கடைத்தேறச் செய்தீர். ஒவ்வொரு நாளும் பரிசுத்த நற்கருணை வழியாக போதித்த அன்பிற்குத் தூது செல்லும் மேலானதொரு நற்கருணை வழியாக போதித்த அன்பிற்குத் தூது செல்லும் மேலானதொரு நற்பணிக்கு என்னைத் தேர்ந்தெடுத்து ஆணையிட்டுச் சரியான பாதையையும் காட்டி விட்டீர்கள். என் முயற்சிக்குத் துணை நின்று என் புனித முயற்சிகள் எல்லா வகையிலும் வெற்றி புரிய வேண்டும் அன்புத் தந்தையே!" என்று மன்றாடுகிறாள் அன்னை தெராசா.