பேராயர் ஃபுல்டன் ஷீன் ஆண்டகை

பேராயர் ஃபுல்டன் ஷீன் ஆண்டகை

அமெரிக்காவில் மிக பிரபலமான மறையுரையாளராக, வானொலி, தொலைக்காட்சியில் முதல் முதலாக இலட்சோப இலட்சம் மக்களைக் கவர்ந்தவர். பல நூற்றுக்கணக்கான சிறந்த நூல்களை எழுதியவர். பெரிய பெரிய புள்ளிகளைக் கத்தோலிக்க மறையில் கொண்டு வந்து சேர்ந்தவர் பேராயர் ஃபுல்டன் ஷீன். இவரது தனித்தன்மை வாய்ந்த அறிவாற்றலுக்கும், பேச்சுத்திறனுக்கும் காரணம் என்ன என்று கேட்ட பொழுது அவர் கூறுவார் "இத்தனையும் என் திறமை, கருத்துச் செறிவு, பேச்சாற்றல் அல்ல; என் புத்திக்கூர்மையும் அல்ல இதோ இந்த நற்கருணைப் பேழை முன் அன்றாடம் நாம் செய்யும் திருமணியில்தான் ஒளி பெறுகிறேன் நான். குருபட்டம் பெற்ற நாள் முதல் 58 ஆண்டுகளாக இந்த அன்றாடத் திருமணி ஆராதனை செய்து வருகிறேன். என் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்து வருகிறேன். அதை அவர் கொடுப்பாரோ, இல்லையோ. நான் உறுதியாக சொல்ல இயலாது.ஆனால், அவர் இந்த வரத்தைக் கொடுக்காவிடில் நான் அவர் முன் தீர்ப்புக்காக நிற்கும் போது அவருக்கே தர்ம சங்கடமாயிருக்கும்"என்று கூறினார். அவர் மன்றாடியவாரே வழக்கம் போல் திருமணி ஆராதனை செய்து கொண்டிருக்கும் போதே இயேசு அவரை விண்ணுலகிற்கு அழைத்துக் கொண்டார்.