தென் அமெரிக்காவில் உள்ள, பெரு நாட்டில் 365 ஆண்டுகளுக்கு முன் நற்கருணைப் புதுமை ஒன்று நடந்தது (Eten, Peru).
நற்கருணை ஆராதனையின் போது, குழந்தை இயேசு நற்கருணையில் காட்சியளித்தார். மேலும், மூன்று இதயங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நற்கருணைத் திருவிழா ஈத்தெனில் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 2, 1649இல் நற்கருணைத் திருவிழாவின் போது, மாலை வழிபாட்டில் நற்கருணையை ஸ்தாபகம் செய்திருந்தனர்.
ஜெரோம் தெ சில்வா மாண்டிரிக் (JEROME DE SILVA MANRIQUE)என்ற பிரான்சிஸ்கன் துறவி நற் கருணையை, நற்கருணைப் பேழையில் வைப்பதற்காகச் சென்றார்.
சென்றவர் தீடீரென்று மலைத்து நின்று விட்டார்.
அவ்வேளையில் நற்கருணையில் குழந்தை இயேசுவின் அழகான முகம் மிகப் பிரகாசமாய்க் காணப்பட்டது.
இதை ஜெரோமும், மக்களும் பார்த்தனர்.
அதே ஆண்டு 1649இல் ஜூலை 22ஆம் தேதி புனித மரிய மதலேனம்மாள் திருநாளின் போது, இரண்டாம் முறையாக, குழந்தை இயேசு காட்சி அளித்தார்.
மடத்தின் தலைவர் மார்கோ லோபஸ் என்ற துறவி கூறுவது போல், சிக்லேயோ (CHICLAYO) மடத்தில் பங்குப் பாதுகாவலியான புனித மரியமதலேனம்மாள் திருநாளின் போது, குழந்தை இயேசு காட்சியளித்தார்.
ஈத்தென் நகரில் ஒரு சிறுவனைப் போல் ஆடை அணிந்து எல்லோரும் பார்க்கும்படி 15 நிமிடங்கள் காட்சியளித்தார்.
மூன்று சிறிய இதயங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்பட்டன.
அது தந்தை, மகன், தூய ஆவியைக் குறிப்பதாக மக்கள் நம்பினர்.
இன்றும் இந்த நற்கருணைப் புதுமை ஈத்தெனில் கொண்டாடப்படுகிறது.