அப்பங்களையும், மீன்களையும் பலுகச்செய்தல்

(யோவா. 5:1-15) மக்களின் பசியைப்போக்க இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகச் செய்த புதுமை மக்களின் ஆன்மீக பசியாற்ற கருணை என்ற புதிய மன்னாவை இயேசு ஏற்படுத்தினார். பழைய ஏற்பாட்டில் எப்படி மெசியாவின் வருகையின் போது யாவே மக்களுக்கு மிகுதியான உணவளிப்பார் என்பதைக் குறிக்கிறது. (தி.பா.37:19:18:16; 132:15) 

இயேசு அப்பங்களை எடுத்தார் கடவுளுக்கு நன்றி கூறினார். அங்கு அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார் எற்ற வார்த்தைகள் நற்கருணையை ஏற்படுத்தும்போது இயேசு செய்த அதே காரியங்களை யோவான் நினைவூட்டுகிறார். 

சிறுவனிடமிருந்து ஐந்து வார்கோதுமை அப்பங்களே, ஆதிதிருச்சபை வாற்கோதுமை அப்பத்தையே திருப்பலியில் பயன்படுத்தப்பட்டது. எப்படி ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து அளித்தாரோ அதேபோல் நற்கருணை வழியாக எண்ணற்ற மக்களுக்கு இயேசு தம் உடலையே தருகிறார். 

பந்தியில் அமர்ந்தவர்களுக்கு அப்பத்தைக் கொடுக்கும்படி தம் சீடர்களுக்குக் கூறிய இயேசு நற்கருணை விருந்தையும் கொடுக்கும்படி தம் சீடர்களுக்குக் கட்டளை இடுகிறார். இயேசு நன்றி கூறியது போல் நாமும் நம் அனுதின உணவுக்காகக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். 

வார்கோதுமை அப்பங்களைப் பலுகச்செய்த இயேசுவுக்கு அப்பத்தை தன் உடலாகவும், இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றும் வல்லமை உண்டு என்று சுட்டிக் காட்டுகிறது. 

அன்று விடுதலை நாயகன் மோசே நைல் நதியை இரத்தமாக மாற்றினார். இன்று விடுதலை நாயகனாக இயேசு இரசத்தை திருஇரத்தமாக மாற்றுகின்றார்.