மிடில்பர்கில் ஒரு பக்தியுள்ள பெண் வாழ்ந்து வந்தாள் (Middleburg, Lovania, Belgium).
அவள் வழக்கம்போல் (ஈஸ்டருக்கு) உயிர்ப்புத் திருநாளுக்கு ஆயத்தமாக, தபசு காலத்தில் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, தப முயற்சிகளைக் கையாண்டாள்.
1374 இல் தபசு காலத்தில் எல்லா வேலையாட்களும் பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ள கோயிலுக்குப் போனார்கள்.
புதிதாகச் சேர்க்கப்பட்ட ஜானும், எஜமானிக்கு மனநோகச் செய்ய விரும்பாமல், கோயிலுக்குச் சென்றான்.
எல்லோரும் நன்மை வாங்கியதால், அவனும் மற்றவர்களைப் போல் கிராதிக்குச் சென்று (Communion Rails) நாக்கை நீட்டினான்.
நற்கருணையோ இரத்தம் சொட்டும் மாமிசமாக மாறிவிட்டது.
ஜான் அதிர்ச்சியுற்றான்.
குரு மாமிசமான நற்கருணையை நற்கருணைப் பேழையில் வைத்துவிட்டார்.
ஜான் தன் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திருந்தினான்.
அன்று முதல் ஜான் ஒரு நல்ல கத்தோலிக்கராக மரணம் மட்டும் வாழ்ந்தான்.
இந்த நற்கருணைப் புதுமையைப் பற்றி பேராயர் உறுதி செய்துள்ளார்.