புனித டோமினிக் சாவியோ

புனித டோமினிக் சாவியோ 1842-1857 (திருநாள் மே 6)

இத்தாலி நாட்டில் பியட்மோண்ட் என்ற ஊரில் பிறந்த இந்த சிறுவன் டோமினிக் சாவியோ. புனித ஜான் போஸ்கோவின் அன்பு மாணவன். அக்காலத்தில் 12 வயது முடிந்த பிறகே சிறுவர்களுக்கு புது நன்மை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், சிறுவன் டோமினிக் திவ்ய நற்கருணை மேல் அதிக பற்றுதல் கொண்டிருந்தால் ஏழு வயதிலேயே புதுநன்மை வாங்கினார். புது நன்மை வாங்குவதற்கு முன்தினம் 4 தீர்மானங்கள் எழுதி வைத்தார்.

1. நான் அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவேன். என் ஆன்மகுரு ஆலோசனைப்படி அடிக்கடி நற்கருணை வாங்குவேன். 

2. ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் நான் திருப்பலியில் பங்கேற்பேன்.

3. இயேசுவும், அன்னை மரியாளும் என் நண்பர்களாய் இருப்பர்.

4. பாவம் செய்வதை விட மரிப்பதே மேல்.

காலையில் பள்ளிக்குப் போகும் போது முதலில் கோயிலுக்குச் சென்று, கோயில் கதவு அடைக்கப்பட்டிருந்தாலும் மண்டியிட்டு, பக்தியாய் நற்கருணை நாதரை ஆராதித்து விட்டுத்தான் பள்ளிக்குச் செல்வேன். அவன் எப்போதும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் காணப்பட்டாலும் தப முயற்சிகள் செய்வதிலும் மிகவும் ஆர்வம் காட்டினான். ஒரு நாள் ஒரு குருவானவர் நோயுற்றவர்க்கு திவ்ய நற்கருணையை எடுத்துச்செல்லும் போது சிறுவன் டோமினிக் மண்டியிட்டு ஆராதனை செய்தான். ஆனால் அவன் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு போர் வீரன் முழங்கால் படியிடாமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த சிறுவன் தன் பையிலிருந்து வெள்ளைக் கைக்குட்டையை அந்த போர் வீரன் முன்னால் விரித்து போடவே குறிப்பை அறிந்து கொண்ட போர் வீரனும் மண்டியிட்டு திவ்யநற்கருணை நாதருக்கு ஆராதனை செலுத்தினார். டோமினிக் சிறுவயதிலேயே புனிதராக வாழ்ந்து மரித்தார்.