சாக்ராதா ஃபோர்மா (SAGRADA FORMA) என்று சொல்லப்படும் நற்கருணை, எல் எஸ்கோரியால் என்ற அரச குல மடத்தில் பார்வைக்கு இன்றும் வைக்கப்பட்டுள்ளது (Gorkum-El Ecorial, Spain).
பிராடஸ்டன்ட் அடியாட்கள் கேர்கும் என்ற தேவாலயத்தில் நுழைந்து கொள்ளை அடித்தனர்.
அவர்கள் செய்த மிகப்பெரிய தேவ நிந்தை என்னவென்றால், வசீகரம் செய்யப்பட்ட நற்கருணையை ஆணி பதிந்துள்ள பூட்ஸ் காலால் மிதித்தனர்.
உடனே, மூன்று ஆணி பதிந்துள்ள காயத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது.
இந்தக் காயப்பட்ட நற்கருணையைப் புனித லாரன்ஸ் கோயிலில் மத்ரீத் (Madrid) அருகாமையில் காணலாம்.
இந்த தேவ துரோகச் செயல் 1572இல் (Sea Beggars) சீ பெக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உல்டிரிக் சுவிங்கிலி (Ulrich Zwngli) என்ற மத விரோதிகளால் செய்யப்பட்டது.
ஆரநின் சிற்றரசன் படை எடுத்துவந்து, மறைமாவட்டப் பேராலயத்தைச் சூறையாடினான்.
அவனுடைய கூலிப்படை நற்கருணைப் பேழையை இரும்புக் கம்பிகளால் தாக்கி உடைத்தார்கள்.
அதிலிருந்த கதிர்பாத்திரத்தை எடுத்து, அதில் வைத்திருந்த நற்கருணையை ஆணி பதிந்துள்ள பூட்ஸ் காலால் மிதித்து நிந்தனை செய்தனர்.
அதன் விளைவாக பெரிய நற்கருணை மூன்று துண்டுகளாக உடைந்து, உயிருள்ள இரத்தம், பீறிட்டு ஓடியது.
ஜியான் வான்தெர் தெல் (Canon Jean vander Dell) என்ற கானன் (Canon) அந்த இரத்தம் கசிந்த நற்கருணையைப் பத்திரப்படுத்தி ஸ்பெயின் நாட்டு இரண்டாம் பிலிப்பு அரசருக்கு 1594இல் கொடுத்தார்.
இரண்டாம் பிலிப்பு அரசர் நற்கருணைத் திருப்பண்டத்தை எல் எஸ்கோரியாவில் உள்ள புனித லாரன்ஸ் தேவாலயத்தில் வைக்கும்படிக் கொடுத்தார்.
இந்தப் புதுமையை நினைவு கூறும் வண்ணம், இத்தாலிய சிற்பி பிலிப்போ பிலிப்பினி சலவைக்கல்லில் பீடம் அமைத்தார்.
இரண்டாம் கார்லோஸ் என்ற அரசர் ஒரு மிகப்பெரிய நற்கருணைப் பீடத்தைக் கட்டி "புதுமையாக அழியாத நற்கருணையை அங்கு வைத்துள்ளார்.
செப். 29லும், அக்டோபர் 28லும் “அழியாத நற்கருணை” ஆடம்பர பவனியில் எடுத்துச் செல்லப்பட்டு, சிறப்புத் திருவிழா கொண்டாடப்படுகிறது.