போலந்து நாட்டில் போஸ்னாம் என்ற ஊரில் ஒரு புதுமை 1399இல் நடந்தது (Poznan, Poland).
மதவிரோதிகள் கோயில் பணிப்பெண்ணிடம் லஞ்சம் கொடுத்து, வசீகரம் பண்ணப்பட்ட மூன்று நற்கருணையை வாங்கினர்.
அவர்கள் வீட்டின் அடித்தளத்தில் (BASEMENT) ஒரு மேஜையில் நற்கருணையைக் கூர்மையான கத்திகளால் குத்தினர்.
அதிலிருந்து இரத்தம் பீறிட்டு அருகில் உள்ள பார்வையற்ற பெண்ணின் கண்களைத் திறந்தது.
அதிர்ச்சியுற்ற மதவிரோதிகள் நற்கருணையை வார்டா ஆற்றங்கரையில் வீசி எறிந்து விட்டனர்.
அந்தப் பக்கம் சென்ற இடையன் மிகப் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் மூன்று நற்கருணையைப் பார்த்து, ஆச்சரியத்துடன் ஓடி ஊர்த் தலைவரிடம் கூறினான்.
தலைவர் இடையனைக் காவல் துறையில் அடைத்து வைத்தான். இடையனோ எப்படியோ தப்பித் தலைவரிடம் மீண்டும் வந்து, தான் கண்ட சம்பவத்தை நேரில் பார்க்கும்படி அழைத்துச் சென்றான்.
அதற்குள்ளாக மக்கள் கூட்டம் அற்புதம் நடந்த இடத்தில் திரண்டு விட்டது.
அம்மறை மாவட்ட ஆயர் வோஜிஸ் ஜாசபெக் யாஸ்டர்பிரிக் (BISHOP WOJCICH JASTERBRIEC) அங்கு வந்து, மண்டியிட்டுச் ஜெபித்த பிறகு ஒரு பொற்சிமிழில் நற்கருணையை எடுத்து ஆடம்பரப் பவனியாக புனித மரியமதலேனம்மாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றார்.
இந்த அற்புத நற்கருணைப் புதுமையைப் பற்றிக் கேள்விபட்ட வால்டிஸ்லா ஜாகில்லோ என்ற அரசர் (KING WLADY SLAN JAGILLO) போஸ்னாம் சென்று ஆராதனை செய்தார்.
அதே இடத்தில், "கிறிஸ்துவின் திருஉடல்” என்ற தேவாலயத்தை கட்டினார். அன்று தேவநிந்தை செய்யப்பட்ட இடத்தில் ஒரு சிற்றாலயமும், அந்த மேஜையையும் இன்றும் காணலாம்.
“இரத்தம் சிந்திய நற்கருணை” பவனி ஒவ்வொரு வியாழக் கிழமையும், "கிறிஸ்துவின் திருவுடல் தேவாலயத்தில் நடக்கிறது.