புனித திரேசா நியூமன்

ஐந்து காய வரம் பெற்ற திரேசா நியூமன் 1898-1962

20 ஆம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்று வாழ்ந்த ஜெர்மனி நாட்டுப் பெண்மனி திரேசா நியூமன். ஐந்து காய வரம் பெற்ற இவர் 40 ஆண்டுகள் 1922 1962 நற்கருணையை மட்டுமே உணவாக உண்டு, வாழ்ந்தாள் என்பது கத்தோலிக்கத் திருச்சபை சரித்திரத்தில் புதிய சகாப்த்தத்தை உண்டு பண்ணியது. புதுமையிலும் புதுமை என்னவென்றால் பாயும் படுக்கையுமாயிருந்த திரேசாவுக்கு நம் ஆண்டவரே தினமும் நற்கருணையைக் கொண்டுவந்து கொடுத்ததே இதற்குப் பல ஆயர்களும், குருக்களும் சாட்சியாய் உள்ளனர். உணவே சாப்பிடாமல், தண்ணீர் முதலாய் குடிக்காமல் ஒருவர் 40 ஆண்டுகள் பட்டினி கிடந்தாள் மரணமே அதன் முடிவு. ஆனால் திரேசா நியூமன் 40 ஆண்டுகள் எந்த உணவு உண்ணாமல் தண்ணீரும் குடிக்காமல் நற்கருணை மட்டுமே உண்டு வாழ்ந்தாள். அவள் எடை குறைவதற்கு பதிலாக எடை கூடியதே மிகப்பெரிய அதிசியம்.

புனித பியோ 50 ஆண்டுகள் ஐந்து காய வரம் பெற்றவர். மிகவும் எளிய உணவை உண்டார். தண்ணீர் குடித்தார். திரேசா நியூமன் உண்ணாமலே எடை கூடியது.

1927 இல் அவள் எடை 55 கிலோ

1935 இல் அவள் எடை 63.5 கிலோ

1945 இல் அவள் எடை 84 கிலோ 

1950 இல் அவள் எடை 90 கிலோ 

1953 இல் அவள் எடை 106 கிலோ

மேலும் ஐந்து காயங்களிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏராளமான இரத்தம் வெளிவரும். ஆனாலும் எடை கூடியதே தவிர குறையவில்லை. திருச்சபை வரலாற்றிலேயே 40 ஆண்டுகள் நற்கருணையை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்தவர் வேறு எவருமில்லை. ஆனால் திருச்சபை எந்த அதிகாரப்பூர்வமான ஆராய்ச்சியோ, அறிக்கையோ, இடவில்லை என்பது மிக வியப்பாய் உள்ளது. இயேசுவின் வாக்கு என்றும் உண்மை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். "என் சரீரம் உண்மையான உணவு. என் இரத்தம் உண்மையான பானம்' (யோவான் 6:55). இந்த சத்தியத்தை நிலைநாட்டவே திரேசா நியூமன் 40 ஆண்டுகள் நற்கருணையை மட்டும் உண்டு 64 ஆண்டுகள் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.