பாக்ஸ்மீர், ஹாலந்து 1400

ஹாலந்தில் 1400 இல் பாக்ஸ்மீர் என்ற ஊரில் அருட்தந்தை ஆர்னால்டு குரோன் திருப்பலி நிறைவேற்றினார் (Boxmeer, Netherlands). 

அவர் வசீகர வார்த்தையை உச்சரித்தபோது, (இது என் இரத்தம்) இரசம் திருஇரத்தமாக மாறிப் பாத்திரத்திலிருந்து பொங்கி (Corporal) துணியில் சிந்தியது. 

குரு அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில் இரசம் ஆண்டவருடைய திருஇரத்தமாய் மாறிவிட்டதா இல்லையா என்று சிறிது சந்தேகப்பட்டார்.

அவர் பூசை பாத்திரத்தில் ஊற்றியது வெண்ணிற இரசம். 

ஆனால் பொங்கி வழிந்தது சிவப்பு இரத்தம். 

அவர் சந்தேகப்பட்ட குற்றத்திற்காக ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டார். 

இந்த திருஇரத்தம் படிந்த துணி (Corporal) இன்றும் புனிதமாக வைக்கப்பட்டுள்ளது. 

திருத்தந்தை 11 ஆம் கிளமெண்ட், 14 ஆம் பெனடிக்ட், 9 ஆம் பத்திநாதர். 13 ஆம் சிங்கராயர் போன்ற பல திருத்தந்தையர் இந்தப் புதுமையை அங்கீகரித்துள்ளனர்.