இஸ்ராயேல் மக்கள் இறைவனோடு ஒப்புரவாகும்படி காளைகளைப் பலி செலுத்தினர். ஆனால், அது அவர்கள் பாவத்தைப் போக்கவில்லை. இயேசு தன்னையே கல்வாரி மலையில் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து எல்லா மக்களையும் பாவத்திலிருந்து மீட்டுக் கொண்டார் (எபி.9:12-14) கிறிஸ்துவின் சிலுவைப்பலி நம்மை பாவத்திலிருந்து மீட்டுக் கொண்டார் (எபி. 9:12-14) கிறிஸ்துவின் சிலுவைப் பலி நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கி, புனிதப்படுத்தி இறைவனோடு ஒப்புரவாக்கி, நிலைவாழ்வைப் பெற்றுத்தருகிறது. (எபி.10:1-18; எபேசி. 5:2; யோவான் 6:48-58).
இஸ்ராயேல் மக்கள் பலி உணவை உண்டார்கள். ஆனால் அது பாவத்தின் விளைவான சாவிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. இயேசு கிறிஸ்துவோ தன் உடலையும், இரத்தத்தையும் ஆன்மீக உணவாகவும் பானமாகவும் நற்கருணை அருள் அடையாளத்தின் வழியாக நமக்குத்தந்து நிலைவாழ்வை நமக்கு பெற்றுத் தந்தார் (யோவா.6:41-8).
இஸ்ராயேல் மக்கள் மத்தியில் இறைவன் பிரசன்னமானார். வழி நடத்தினார். ஆனால் நிரந்தரமாக நிலைகொள்ளவில்லை இயேசுகிறிஸ்துவோ மனித உருவிலே தோன்றிய இறைமகன். அவருடைய இறைபிரசன்னத்தை நிரந்தரமாக நற்கருணை அருள் அடையாளத்தின் வழியாக நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார். நற்கருணை அவரது தொடர் பிரசன்னம். "இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத். 28:20), "இதோ கடவுளின் உறைவிடம் மனிதரிடையே உள்ளது. அவர்களோடு அவர் குடி கொள்வார். அவர்கள் அவருக்கு மக்களாயிருப்பர். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்" (தி.வெ.21:3).