பெல்ஜிய நாட்டில், விவர்செல் (Viversel)என்ற ஊரில் (Abby of Harkenrode) ஹார்கன்ரோடு என்கிற துறவற மடத்திலே 688 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதுமை நடந்தது (Viversel, Belgium).
ஒரு குரு நோயுற்றிருந்த ஒருவருக்கு நோயில் பூசுதலுக்காகத் தன் கைப்பையில் எண்ணையும், சிமிழில் நற்கருணையும் எடுத்துச் சென்றார்.
அவர் நோயாளியின் அறைக்குள் செல்லும் போது தன் கைப்பையை வெளியே வைத்து விட்டு, ஒப்புரவு அருட்சாதனம் கொடுக்க, அவர் அவன் படுக்கை அறைக்குள் சென்றார்.
அந்த சமயத்தில் ஒரு திருடன் அந்தப் பையை எடுத்து அதில் உள்ள சிமிழை எடுத்து, அதில் வைத்திருந்த நற்கருணையை வீசிவிட்டு, சிமிழை மட்டும் எடுத்துச் செல்ல முயற்சித்தான்.
என்னே அற்புதம்! அவன் நற்கருணையைக் கையில் எடுத்ததும், அதிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
அதிர்ச்சியுற்ற திருடன், அதை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டான்
குரு பாவமன்னிப்புக் கொடுத்துவிட்டு. நற்கருணை வழங்க பையைப் எடுத்தபோது, நற்கருணை வைத்திருந்த சிமிழிலிருந்து இரத்தம் சிந்துவதைக் கண்டு மிகவும் அதிர்ச்சியுற்றார்.
அந்தத் துறவற மடாதிபதி அருட்திரு சைமனிடம் அவர் சொல்ல, அந்த மடாதிபதி நற்கருணையைத் தேவாலயத்தின் பீடத்தின் மேல் வைத்தார்.
தேவாலயத்தில் கூடியிருந்த துறவிகள், அந்த நற்கருணையில் இயேசுவின் முள்முடி தரித்த திருமுகத்தைக் கண்டு, ஆச்சரியத்துடனும், பக்தியுடனும் ஆராதனை செய்தனர்.
இந்தப் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் நற்கருணையின் நிமித்தம் பல புதுமைகளும், அற்புதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.