மியர்சென் 1222-1465

நெதர்லாந்தில் உள்ள மியர்சென் என்ற ஊரில் இருபெரும் புதுமைகள் நடந்துள்ளன (Meerssen, Netherland). 

முதலாவது 1222 இல் ஞாயிறு திருப்பலியைக் குருவானவர் நிறைவேற்றியபொழுது, (பெரிய) நற்கருணையிலிருந்து திருஇரத்தம் வழிந்து, துகிலை நனைத்தது. 

இந்த இரத்தக்கறைப் படிந்த நற்கருணையைப் புனித பண்டமாக வைத்து பாதுகாத்து வந்தனர். 

1465 ஆம் ஆண்டு ஒரு தீ விபத்தில் ஆலயம் முற்றுமாக எரிந்து சாம்பலானது. 

ஆனால், ஒரு ஏழை குடியானவன் நற்கருணைக் கதிர்பாத்திரத்தை ஆச்சரியமாய் காப்பாற்றினான். 

மீண்டும் தேவாலயம் மியர்செனில் கட்டப்பட்டது. 

1938 ல் 11 ஆம் பத்திநாதர் என்ற திருத்தந்தை அதை பேராலயமாக உயர்த்தினார். 

இந்த நற்கருணைக் கதிர்பாத்திரத்தை இன்றும் மியர்செனில் காணலாம். 

நெதர்லாந்தில் மிகப் புகழ் பெற்ற திருத்தலமாக மாறிவிட்டது. 

இந்த நற்கருணைப் புதுமையின் நினைவுச் சின்னமாக வெளியிட்டுள்ள நாணயங்களைப் படத்தில் பார்க்கலாம்.