மூவொரு இறைவனும் நற்கருணையும்

மூவொரு இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களாய்யிருந்தாலும் ஒரே இறைவனாய் இருக்கிறார் என்பது அடிப்படை விசுவாச சத்தியம். இந்த விசுவாச மறைபொருளை இறைமகன் இயேசுவே நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தினார். 

இந்த இறைவன் அருளடையாளங்கள் வழியாக மனிதர்களோடு உறவு கொள்கிறார். சிறப்பாக நற்கருணை வழியாக அவர் தம்மையே மனிதருக்குக் கையளிக்கிறார். மண்ணுலகில் மனிதரின் அருள் வாழ்வின் ஊற்றும், மையமும் ஆகி உள்ளது. 

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குத் தந்தை உலகின் மேல் அன்பு கூர்ந்தார்' என்று யோவான். 3:16 இல் கூறுகிறார். 

அனுப்பியவர் தந்தை. அனுப்பப்பட்டவர் இறைமகன் இயேசு. ஆகவே தந்தை ஓர் ஆள், இயேசு இரண்டாம் ஆள். "நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன் இப்போது உலகைவிட்டு தந்தையிடம் செல்கிறேன் (யோவா. 16:28) 

உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை உங்களுக்கு அவரை அருள்வார்" (யோவா. 14:16) 

தந்தையிடமிருந்து புறப்பட்டு வருபவர் மூன்றாம் ஆளாகிய தூய ஆவியானவர். இவர் நம்மிலே என்றும் இருப்பவர். அருட்சாதனங்கள் வழியாக நம்மைப் புனிதப்படுத்துபவர்.