உரோமை, இத்தாலி 595

ஜெர்மனி நாட்டில் அன்டெக் (Andech) ல் உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் 595யில் ஒரு புதுமை நடந்தது (Rome, Italy). பெரிய கிரகோரியார் என்ற திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றினார். நன்மை வாங்க வந்த ஒரு மேட்டுக்குடி பெண், "இதோ கிறிஸ்துவின் திருஉடல் என்று திருத்தந்தை சொன்ன போது சிரித்தாள். எனவே திருத்தந்தை அவளுக்கு நன்மை தராமல் நற்கருணையை ஒரு தட்டில் வைத்துவிட்டார். திருப்பலி முடிந்ததும் அவளிடம், "நீ ஏன் சிரித்தாய்?” என்று திருத்தந்தை கேட்டபோது, "நான் தான் அந்த அப்பத்தை செய்து கொடுத்தேன். நீங்கள் இது கிறிஸ்துவின் உடல் என்று சொன்னதால் சிரித்து விட்டேன்" என்றாள். அக்கால வழக்கப்படி, பங்கு மக்கள் தான் அப்பம் செய்து கொடுப்பார்கள். குரு அதை வாங்கித் திருப்பலியில் வசீகரம் செய்வார். வசீகரம் செய்யப்பட்ட அப்பம் இயேசுவின் திருஉடலாக (Transubstantiation) பொருள் மாற்றம் பெறுகிறது என்று கத்தோலிக்கர்கள் விசுவசிக்கிறார்கள். ஆனால் அந்த மேட்டுக்குடி பெண் அந்த உண்மையை நம்பவில்லை. திருத்தந்தை பெரிய கிரகோரியார், தட்டில் தான் வைத்த நற்கருணையைப் பார்த்தபோது, நற்கருணை உடலாகவும், இரத்தமாகவும் மாறியிருந்தது. இந்தப் புதுமையைக் கண்ட அப்பெண் மண்டியிட்டு கதறி அழுதார். பாவமன்னிப்பு பெற்றாள். இந்த புதுமைக்குப் புனித பெரிய கிரகோரியாரே சாட்சி. இந்தத் திருப்பண்டம் இன்றும் அழியாமல் அன்டெக்சில் ஆசீர்வாதப்பர் துறவற மடத்தில் இன்றும் உள்ளது.