புனித பீட்டர் ஜீலியன் ஐமார்ட் 1811-1868 (திருநாள் ஆகஸ்டு 2, நற்கருணை அப்போஸ்தலர்)
ஒரு நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் ஜீலியன், மேரி என்ற பெற்றோருக்கு தவப்புதல்வனாக பிறந்தவர்தான் பீட்டர் ஐமார்ட். சிறுவயதிலேயே பீட்டரை அவர் தாய் மேரி நற்கருணை நாதருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார். நடக்க ஆரம்பித்த பீட்டர் தன் தாயுடன் கோயிலுக்குச் சென்று வெகு நேரம் நற்கருணை நாதருடன் உரையாடுவார். தனியாகக் கோயிலுக்குச் செல்லும் பீட்டர் நற்கருணைப் பேழைக்கு அருகில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு 'நான் இயேசுவிடம் பேசுகிறேன் அவர் என்னோடு பேசுகிறார். என்று கூறுவார். புதுநன்மை வாங்கும் முன்பே தன் அக்காவிடம், "நீ நன்மை வாங்கும் போது நான் தூய நல்லொழுக்கமுள்ள பையனாக இருக்கும்படி இயேசுவிடம் வேண்டிக் கொள்" என்று கூறுவார். புதுநன்மை வாங்கிய பொழுது இயேசுவை மார்போடு அணைத்துக் கொண்டு "நான் ஒருநாள் வாக ஆவேன் ' குருவாக என்று கூறிய பீட்டர் எல்லாரும் சிறுவயதிலேயே நன்மை வாங்க வேண்டும் என்று சொல்வார். ந என்று6 புதுநன்மை வாங்காத இளைஞர்கள் திருச்சபைக்குப் பேரிழப்பு இவர் 18 வயதில் மார்சேல்ஸ் நகரில் அமல மேரியின் துறவிகள் சபையில் சேர்ந்தார். உடல் நலம் குன்றியதால் அந்தச் சபையை விட்டு விலகி முதலில் மறைமாவட்ட குருவாகி பின்னர் மேரிஸ்ட் சபையில் சேர்ந்தார். அன்பின் அனுமானமாகிய நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசுவை மகிமைப்படுத்துவதற்காக ஒரு தனிப்பட்ட துறவற சபைத் தலைவருடையவும், பேராயருடைய ஒப்புதலுடனும் பாரிசில் திவ்ய நற்கருணை சபைக் குருக்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். இதற்கு மேலாக நற்கருணை சங்கம் என்ற அமைப்பின் மூலம் பங்குத் தலங்களிலும் மற்ற மேய்ப்புப் பணிகளிலும் ஈடுபட்ட குருக்கள் யாவரும் இதில் பங்கு பெற வழிவகுத்தார். இச்சங்கத்தினர் வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் நற்கருணை ஆராதனை செய்ய வாக்குறுதி கொடுத்தனர். பொது நிலையினருக்கும் இத்தகைய ஓர் அமைப்பை உருவாக்கித் தந்தார். கி.பி. 1868 ஆகஸ்ட் முதல் நாள் இவர் இறைவனடி சேர்ந்தார். 1962 இல் இவருக்குப் புனிதர் பட்டம் சூடப்பட்டது. திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் இவருக்குத் திவ்ய நற்கருணை நாதரின் நண்பர் என்ற பட்டத்தை அளித்தார்.