சிம்பாலா 1370

சிம்பாலா என்ற நகரில் (Cimballa, Spain) அருட்திரு தோன்தாமாசோ என்பவர் புனித மரியன்னை கோயிலில் பங்குக்குருவாக இருந்தார். நற்கருணையில் இயேசு உண்மையாலுமே இருக்கிறாரா? என்ற சிந்தனை பல மாதங்களாக அவரை வாட்டி வதைத்தது.

1370 ஆம் ஆண்டு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றியபோது அவர், "இது என் சரீரம்" என்றபோது அப்பம், தசையாகவும், “இது என் இரத்தம் என்ற போது, இரசம், திருஇரத்தமாகவும் மாறியதுமல்லாமல், பீடத்தில் வழிந்தோடியது. 

அருட்திரு தோன்தாமாசோ மனம் நொந்து, கண்ணீர் சிந்தி அழ ஆரம்பித்தார். திருப்பலிக்கு வந்த விசுவாசிகள் குரு கண்ணீர் வடித்து அழுவதையும், பீடத்தில் திருஇரத்தம் சிந்தியிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அன்றே புனித திருஉடலும், திருஇரத்தமும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆண்டுதோறும் செப். 12 ஆம் தேதி சிம்பாலாவில் நற்கருணைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

புனித பண்டமானது பொற்கதிர் பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல அற்புதங்களும் நடந்து வருகின்றன. 640 ஆண்டுகள் கழிந்து விட்டாலும், ஸ்பெயின் நாட்டில் சிம்பாலா புனித மரியன்னை கோயிலில் இந்தப் புனித பண்டங்களை இன்றும் காணலாம். 

அருட்திரு தோன் தாமாசோ ஒரு துறவற இல்லத்தில் தனது வாழ்நாள் முழுவதையும் ஜெபத்திலும், தபத்திலும் செலவிட்டார்.