ஸ்பெயின் நாட்டில் ஓனில் பங்குக் கோயிலிருந்து நற்கருணை வைத்திருந்த சிமிழ் (Pyx) திருடு போய்விட்டது (Onil, Spain).
அடுத்த (Tibi) டிபி என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டது.
சில மாதங்கள் சென்றாலும் சிமிழில் வைத்திருந்த நற்கருணை சிறிதும் கெடாமல் இருந்தது.
119 ஆண்டு கழித்து நவம்பர் 28, 1943இல் வாலன்சியா பேராயரின் பிரதிநிதியாகிய டோன் கில்லர்மோ ஹிஜாரூபியா (Don Gullermo Hijarrubia) ஆராய்ச்சி செய்த பின் நற்கருணை 119 ஆண்டுகள் கழிந்தும் கெடாமலும், ஒரு மாற்றமும் அடையாமல் இருப்பதால் அது உண்மையான புதுமை என்று உறுதி செய்தார்.
இன்று 182 ஆண்டுகளாய் நற்கருணை அப்படியே நற்கருணைக் கதிர்பாத்திரத்தில் இருப்பதைப் புனித யாகப்பர் அப்போஸ்தலரின் பேராலயத்தில் இன்றும் காணலாம்.