இயேசு சபை மறைசாட்சிகள்

இயேசு சபை மறைசாட்சிகள், வட அமெரிக்கா 1648 - 1649

இயேசு சபையைச் சார்ந்த ஐசக் ஜோகஸ், ஜீன் டெலா லாண்டே, ஜீன்டெ பிரபு, காப்ரியேல் லாலமெண்ட், அந்துவான் டானியல், சார்லஸ் கார்னியர், நோயேல் சாபானெஸ், ரேனே கோபில் என்ற எட்டு பிரெஞ்சு குருக்களும் நற்கருணை நாதர் மேல் மிக ஆழ்ந்த பக்தி பற்றுதல் கொண்டிருந்தனர். இவர்கள் காடுகளும், பெரிய ஏரிகளும் நிறைந்த வட அமெரிக்காவில் வசித்துவந்த நாகரீகமற்ற சுதேசிகளுக்கு இயேசுவை அறிவிக்க முடிவு செய்தனர். நற்கருணை மேல் அவர்கள் கொண்டிருந்த பக்தியே அவர்களுடைய துன்பங்களிலும், துயரங்களிலும் ஆறுதலாகவும், ஆற்றலாகவும் இருந்தது. புனித ஐசக் ஜோகஸ் நற்கருணை நாதரோடு ஒன்றித்திருந்தது தனக்கு மிகவும் முன் மாதிரியாகவும், ஆற்றலாகவும் இருந்ததாக அருட்திரு பியுடே எழுதுகிறார்.

புனித சார்லஸ் கார்னியர் கூறுவதாவது, "நற்கருணையே எங்களுக்கு எல்லையில்லா பேரின்பமும், மனதுக்கு ஆறுதலுமாக இருக்கிறது. நமக்குத் தேவையான பலத்தையும் உதவியையும் கொடுப்பதற்காகவே கடவுள் நம்மோடு இந்த எளிய குடிசையில் தங்கி இருக்கிறார். நற்கருணை நாதரே அவர்களுக்கு எல்லையில்லா இன்பமும் ஆறுதலுமாகும். மேலும் அவர் கூறுகிறார். "அன்பு சகோதரர்களே! கடவுளைப் போற்றுங்கள் ஏனெனில் மறைசாட்சி முடியை தினமும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் புனிதர்களையும் மறைசாட்சிகளையும் கடவுள் நமக்குத் தந்துள்ளார்.

இந்த எட்டு பிரெஞ்சு மறைப் போதகர்களும் ஷரோன் என்ற சுதேசிகளை இயேசுவிடம் அழைத்து வந்தனர். இது யுரோக்கிஸ் என்ற ஜாதியினருக்குக் கோபத்தை மூட்டியது. இதனால் இரு வாதியினரிடையே சண்டை மூண்டது. யுரோக்கிஸ் ஷரோன்களை ஒழித்துக்கட்ட முடிவு செய்தனர். எனவே எட்டு மறைப் போதகர்களையும் பிடித்து சொல்லன்னா சித்தரவதைக்கு உள்ளாக்கிக் கொன்று விட்டனர். இந்த எட்டு போதகர்களும் இயேசுவுக்காய் உயிர் துறந்தனர். அன்று முதல் அமெரிக்காவில் கிறிஸ்தவ மார்க்கம் காட்டுத்தீயென பற்றி எரியத் தொடங்கியது.